Friday, April 12, 2024
Home » ஒன்றிய அரசு பணிகளில் மகளிருக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு ஏழை பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம்: ராகுல் காந்தி அறிவிப்பு

ஒன்றிய அரசு பணிகளில் மகளிருக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு ஏழை பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம்: ராகுல் காந்தி அறிவிப்பு

by Arun Kumar

துலே: காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் ஏழை பெண்களின் வங்கி கணக்கில் ஆண்டுக்கு ரூ.1லட்சம் செலுத்தப்படும், ஒன்றிய அரசு பணிகளில் மகளிருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் என்பது உள்ளிட்ட 5 வாக்குறுதிகளை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அறிவித்துள்ளார். மகாராஷ்டிராவில் ராகுல் காந்தி தலைமையிலான இந்திய ஒற்றுமை நீதி யாத்திரை நடந்து வருகின்றது. இதன் ஒரு பகுதியாக துலே மாவட்டத்தில் நடந்த மகளிர் பேரணியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கலந்து கொண்டார். அப்போது ராகுல்காந்தி காங்கிரஸ் கட்சியின் சார்பாக பெண்களுக்கான 5 வாக்குறுதிகளை அறிவித்தார்.

* காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் ஏழை பெண்களின் வங்கி கணக்கில் ஆண்டுக்கு ரூ.1லட்சம் செலுத்தப்படும்.
* ஒன்றிய அரசு பணிகளில் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு,
* ஆஷா, அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் மதிய உணவு திட்டங்களில் பணிபுரியும் பெண்களுக்கான ஒன்றிய அரசின் பங்கு இரட்டிப்பாக்கப்படும்.
* பெண்களுக்கு அவர்களின் உரிமைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அவர்களின் பிரச்னைகளுக்காக வாதாடவும் ஒரு நோடல் அதிகாரி ஒவ்வொரு பஞ்சாயத்திலும் நியமிக்கப்படுவார் ,
* நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் பணிபுரியும் பெண்களுக்கான தங்கும் விடுதிகள் அமைக்கப்படும்” என்று ராகுல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தனது டிவிட்டர் பதிவில்,” மக்களவை தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி பெண்களுக்கான 5 வாக்குறுதிகளை அறிவித்துள்ளது. எங்களது வாக்குறுதிகள் மற்றும் அறிக்கைகள் வெற்று வாக்குறுதிகள் அல்ல. எங்களது வார்த்தைகள் கல்லில் பதிக்கப்பட்டுள்ளது. 1926ம் ஆண்டில் இருந்து தற்போது வரை நமது எதிரிகள் பிறந்தபோதில் இருந்து நாங்கள் கட்சியின் கொள்கைகளை உருவாக்கி அவற்றை நிறைவேற்றி வருகிறோம். அனைவரும் ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பை காப்பாற்றுவதற்கான போராட்டத்தில் எங்களது கைகளை வலுப்படுத்த வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

You may also like

Leave a Comment

2 + 19 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi