மதுரை: ஒன்றிய அரசின் சி.பி.எஸ்.இ. விளையாட்டு போட்டிகளில் அரசு சி.பி.எஸ்.இ. பள்ளி மாணவர்களையும் அனுமதிக்க ஆணையிடப்பட்டுள்ளது. ஒன்றிய அரசின் கீழ் வரும் சிபிஎஸ்இ தனியார் பள்ளி, அரசு ரயில்வே பள்ளி என பாகுபாடு காட்டுவது ஒருதலைபட்சமான செயல் எனவும் தனியார் பள்ளி சிபிஎஸ்இ மாணவர்களுக்கு மட்டும் அனுமதி என்பது தனியார் பள்ளியை ஊக்குவிப்பதாக உள்ளது எனவும் மதுரையைச் சேர்ந்த சந்திரா என்பவரின் வழக்கை விசாரித்த ஐகோர்ட் மதுரை கிளை நீதிபதி புகழேந்தி உத்தரவிட்டுள்ளார்.