திருப்பூர்: ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டை ஒன்றிய அரசு விசாரணைக்கு எடுக்கும் என அண்ணாமலை கூறினார். அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், அதானியின் போலி நிறுவனம் என்று குற்றச்சாட்டுக்குள்ளான நிறுவனத்தில், பங்குச் சந்தை ஒழுங்காற்று வாரிய (செபி) தலைவராக இருக்கும் மாதவி பூரி புச்க்கும் அவரது கணவருக்கும் பங்குகள் இருந்ததாக கூறியிருந்தது. மொரீஷியஸ் மற்றும் பெர்முடா நாடுகளில் கவுதம் அதானியின் சகோதரர் வினோத் அதானி மோசடியில் ஈடுபட்ட போலி நிறுவனத்தில், செபியின் தலைவர் மாதவியும் அவரது கணவர் தவால் புச்சும் பங்குகள் வைத்திருந்தது தெரியவந்துள்ளது என்றும் குறிப்பிட்டிருந்தது.
இந்நிலையில், திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை அளித்தபேட்டி: பிரதமர் மோடியின் கோரிக்கையை ஏற்று நாடு முழுவதும் இன்று மரக்கன்று நடப்பட்டு வருகிறது. 78 வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் வருகிற 13, 14 மற்றும் 15ம் தேதிகளில் வீடுகளில் தேசிய கொடி ஏற்ற மோடி வலியுறுத்தி உள்ளார். ஹிண்டன்பர்க் நிறுவனம் ‘செபி’ தலைவர் மீது குற்றச்சாட்டை முன் வைத்துள்ளது. அதை அலட்சியமாக எடுத்து கொள்ளாமல் ஒன்றிய பாஜ அரசு விசாரணைக்கு எடுத்து கொள்ளும் என்றார்.