சென்னை: ஒன்றிய அரசைக் கண்டித்து ஆக.21 முதல் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி நீதிமன்றங்களில் வழக்கறிஞர்கள் தொடர் போராட்டம் நடத்துகின்றனர். 3 குற்றவியல் சட்டங்களின் பெயரை மாற்றி மறுசீரமைக்கும் ஒன்றிய அரசின் நடவடிக்கைக்கு வழக்கறிஞர் சங்க கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. ஆக.21 முதல் அனைத்து நீதிமன்றங்களிலும் தொடர் முழக்கப் போராட்டம் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.