நாகர்கோவில் : நாகர்கோவில் கோணத்தில் ஒன்றிய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த ஓவிய ஆசிரியர் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ராமச்சந்திர சோனி (50) கைது செய்யப்பட்டார். இதுதொடர்பாக சென்னையில் இருந்து கேந்திரிய வித்யாலயா பள்ளி ஆணையர் தலைமையில் 6 பேர் கொண்ட குழுவினர் நேற்று நாகர்கோவில் கோணத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். பள்ளி தலைமை ஆசிரியரிடம் தனியாக விசாரணை நடத்தி விவரங்களை கேட்டறிந்தனர். பாதிக்கப்பட்ட மாணவிகளின் தரப்பிலும் அவர்களின் பெற்றோர் தரப்பிலும் சிலர் ஆஜராகி விளக்கம் அளித்ததாக கூறப்படுகிறது. அப்போது நாகர்கோவில் அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் சாந்தி உள்ளிட்டோரும் உடன் இருந்தனர்.
ஒன்றிய அரசு பள்ளியில் சிறப்புக்குழு விசாரணை
previous post