புதுடெல்லி: இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் மாபெரும் சாதனை ‘சந்திரயான்-3’ விண்கலம் நிலவில் இறங்கிய ஆகஸ்ட் 23ம் நாளாகும். இந்தியா சந்திரனுக்கு விண்கலம் அனுப்பிய நான்கு நாடுகளின் ஒன்றாகும். ஆனால், நமது சந்திரயான்-3 விண்கலம் மட்டும்தான் உலகிலேயே முதன்முறையாக நிலவின் தென் துருவப்பகுதியில் தரையிறங்கிய விண்கலமாகும். சந்திரயான்-3 நிலவில் இறங்கிய சாதனையை போற்றும் வகையில் ஆகஸ்ட் 23ம் தேதியை தேசிய விண்வெளி தினமாக கொண்டாடப்படும் என்று பிரதமர் மோடி ஆகஸ்ட் 26 அன்று பெங்களூரில் தெரிவித்தார. இதைதொடர்ந்து ஒன்றிய அரசு ஆகஸ்ட் 23ம் தேதியை தேசிய விண்வெளி தினமாக கொண்டாடப்படும் என்று நேற்று முன் தினம் அறிவித்தது. இதற்கான அரசாணையையும் வெளியிட்டுள்ளது.