சென்னை: மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ஒன்றிய அரசு உரிய நிதி ஒதுக்கவில்லை என கனிமொழி குற்றசாட்டு தெரிவித்துள்ளார். முதல்வர் கேட்ட நிதியை ஒன்றிய அரசு தரவில்லை; பாஜகவுடன் திமுக எப்படி நெருக்கமாக இருக்கும்? என்று கேள்வி எழுப்பியுள்ளார். ஒன்றிய அரசு தமிழ்நாட்டுக்கு வரக்கூடிய எஸ்.எஸ்.ஐ கல்வித்திட்டத்துக்கு நிதி ஒதுக்கவில்லை. சென்னை, தூத்துக்குடி போன்ற பகுதிகளில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புக்கு ஒன்றிய அரசு நிதி தரவில்லை எனவும் கூறியுள்ளார்.