சென்னை: இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் அனுப்பியுள்ளார். இலங்கையால் சிறைபிடிக்கப்பட்ட அனைத்து மீனவர்கள், படகுகளை விடுக்க நடவடிக்கை தேவை. கடந்த 7 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தமிழக மீனவர்கள் இந்த ஆண்டு கைது செய்துள்ளனர். மீன்பிடி படகுகளை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்கவும் முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.