ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம் ஸ்ரீபெரும்புதூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு, ஸ்ரீபெரும்புதூர் ஒன்றிய குழு தலைவர் கருணாநிதி தலைமை வகித்தார். துணை தலைவர் மாலதி டான்போஸ்கோ வரவேற்றார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சூர்யா, பானுமதி, மாவட்ட கவுன்சிலர் பாலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், ஸ்ரீபெரும்புதூர் எம்எல்ஏ செல்வபெருந்தகை கலந்துகொண்டு பேசினார். இதனையடுத்து, ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்தில் வளர்ச்சி பணிகள் குறித்து பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இக்கூட்டத்தில், ஒன்றிய கவுன்சிலர்கள் கோமதி கணேஷ்பாபு, பரமசிவன், மல்லிகா ரவிச்சந்திரன், எல்லம்மாள் குணசேகரன், யுவராணி சேட்டு, தியாகராஜன், சத்யா பூபாலன், கவுன்சிலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.