டெல்லி: உஜ்வாலா திட்டத்தின் கீழ் சமையல் எரிவாயு சிலிண்டருக்கு கூடுதலாக ரூ.200 மானியம் வழங்க ஒப்புதல் அளித்துள்ளனர். டெல்லியில் பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக மானியம் வழங்கப்படுவதன் மூலம் உஜ்வாலா திட்டத்தின் கீழ் சிலிண்டர் விலை ரூ.200 குறையும் என்று தகவல் தெரிவித்துள்ளனர்.