டெல்லி : ரூ.1.5 லட்சம் கோடி முதலீடுகளை ஈர்க்கும் வகையில் நாட்டில் புதியதாக 12 தொழிற்பேட்டைகளை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ரூ.28,692 கோடி முதலீட்டில் தொழிற்பேட்டைகள் அமைக்கப்படும் என்று மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். தொழில் முனைவோருக்கான நகரங்களாக 12 பகுதிகளில் தொழிற்பேட்டை அமையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.