சென்னை : தமிழர்களுக்கு எதிராக கருத்து தெரிவித்த விவகாரத்தில் மன்னிப்பு கோரினார் ஒன்றிய அமைச்சர் ஷோபா கரந்தலஜே. தமிழக மக்களிடம் மன்னிப்பு கேட்டு மத்திய அமைச்சர் ஷோபா கரந்தலஜே சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்புக்கு தமிழ்நாட்டை சேர்ந்தவர் காரணம் என ஷோபா கரந்தலஜே கூறியது சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது.