பணியிடங்கள் விவரம்:
1. Manager (Domestic Transportation): 1 இடம். வயது: 38க்குள். சம்பளம்: ரூ.1,06,350. தகுதி: ஏதாவதொரு பாடத்தில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் 9 வருட பணி அனுபவம் அல்லது ஏதாவது ஒரு பாடப்பிரிவில் பொறியியல் பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் 6 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
2. Officer:
i) Custom Operations: 1 இடம். சம்பளம்: ரூ.41,262. தகுதி: ஏதாவதொரு பாடத்தில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் 2 வருட பணி அனுபவம்.
ii) Marketing: 1 இடம். சம்பளம்: ரூ.37,169. தகுதி: லெதர் டெக்னாலஜி பிரிவில் டிப்ளமோ அல்லது பொறியியல் பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் 2 வருட பணி அனுபவம்.
iii) Electrical: 1 இடம். சம்பளம்: ரூ.41,262. தகுதி: எலக்ட்ரிக்கல் பிரிவில் டிப்ளமோ தேர்ச்சியுடன் 2 வருட பணி அனுபவத்தோடு, தமிழ்நாடு மின்சார வாரியம் அங்கீகாரம் பெற்ற ‘சி’ லைசென்ஸ் பெற்றிருக்க வேண்டும்.
3. Junior Officer:
i) Operations: 1 இடம். சம்பளம்: ரூ.35,132. தகுதி: ஏதாவதொரு பாடப்பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் ‘ஜி’ கார்டு ஹோல்டர் சான்றிதழ் பெற்றிருக்க ேவண்டும்.
ii) Operations: 2 இடங்கள். சம்பளம்: ரூ.36,977. தகுதி: ஏதாவதொரு பாடத்தில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
iii) Sea CHA: 1 இடம். சம்பளம்: ரூ.36,977. தகுதி: ஏதாவதொரு பாடத்தில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் ‘ஜி’ கார்டு ஹோல்டர் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
iv) Domestic Operations: 2 இடங்கள். சம்பளம்: ரூ.36,977. தகுதி: ஏதாவதொரு பாடத்தில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.மேற்குறிப்பிட்ட ஆபீசர் மற்றும் ஜூனியர் ஆபீசர் பணிகளுக்கு வயது 30க்குள் இருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பில் எஸ்சி/எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்படும். இடஒதுக்கீடு விவரங்களை இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
விண்ணப்பதாரர்களுக்கு எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.https://www.balmerlawrie.com/careers/current-openings என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்
விண்ணப்பிக்க கடைசி நாள்: 20.06.2025.