சென்னை: தமிழ்நாடு விவசாயிகள்-தொழிலாளர்கள் கட்சி மற்றும் தமிழக கட்டிட தொழிலாளர்கள் மத்திய சங்கத்தின் சார்பில் உலக இளைஞர் தின விழா மாநாடு நேற்று நடந்தது. மாநில இளைஞரணி செயலாளர் சமைய செல்வம் தலைமை வகித்தார். கட்சி தலைவர் பொன்குமார், அமைச்சர் பி.மூர்த்தி கலந்துகொண்டு பேசினர்.
மாநாட்டில், தமிழ்நாட்டில் உள்ள இளைஞர்களுக்கு இல்லம் தேடி கல்வி, காலை உணவு திட்டம், உயர்கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் போன்ற பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருவது, மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் அமைத்தது போன்றவற்றிற்காக முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு தெரிவிப்பது, தமிழ்நாட்டில் உள்ள ஒன்றிய அரசு அலுவலர்களுக்கான பணி நியமனங்களில் தமிழ்நாட்டு இளைஞர்களை மட்டுமே நியமனம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.