புதுடெல்லி: ஒன்றிய அரசின் முக்கிய துறைகளின் செயலாளர்களை மாற்றி அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஒன்றிய சுகாதாரத்துறை செயலாளர் அபூர்வ சந்திரா செப்டம்பர் 30ம் தேதி ஓய்வு பெறுகிறார். அவருக்கு பதிலாக பிரதமர் அலுவலக சிறப்பு செயலாளர் புண்ய சலிலா ஸ்ரீவஸ்தவா புதிய சுகாதார செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அதே போல் தொழில்துறை மற்றும் உள்நாட்டு வர்த்தக துறையின் செயலாளர் ராஜேஷ் குமார் சிங் புதிய பாதுகாப்பு செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். சிறுபான்மையினர் நலச் செயலர் கடிகிதலா ஸ்ரீனிவாஸ், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதியின் புதிய செயலாளராக தீப்தி உமாசங்கர் நியமிக்கப்பட்டுள்ளார். நிதிச் சேவைகள் செயலாளர் விவேக் ஜோஷி, பணியாளர் மற்றும் பயிற்சித் துறை செயலாளராக மாற்றப்பட்டுள்ளார்.