Sunday, March 3, 2024
Home » அரசின் பேரிடர் கால நடவடிக்கையை ஒன்றிய நிதி அமைச்சர் அரசியலாக்க முயற்சி: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டு

அரசின் பேரிடர் கால நடவடிக்கையை ஒன்றிய நிதி அமைச்சர் அரசியலாக்க முயற்சி: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டு

by Ranjith

சென்னை: தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் கீழ் செயல்படும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் சென்னை, கோட்டூர்புரம், அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற விழாவில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் செயல்படும் 1,877 மகளிர் சுய உதவிக் குழுக்கள் மற்றும் பகுதி அளவிலான கூட்டமைப்புகளைச் சேர்ந்த 23,742 பயனாளிகளுக்கு ரூ.125.50 கோடி வங்கிக் கடன் இணைப்புகளை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:

ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நான் பயன்படுத்துகின்ற வார்த்தை பணிவாக இருக்கவேண்டும் என கூறியிருக்கிறார். நான் எதாவது கெட்ட வார்த்தைகளை கூறினேனா? மீண்டும் மரியாதையாக நிர்மலா சீதாராமனிடம் நான் கேட்டுக்கொள்வது. எனது சொந்த விஷயத்திற்காக எதனையும் கேட்கவில்லை. தமிழக மக்களுக்காக கேட்கிறேன். நிர்மலா சீதாராமன் முதலில் பேரிடர் என்பதையே ஒப்புக்கொள்ள மறுக்கிறார். அதற்கு தான் சமூகவலைதளத்தில் ஒருவர், பாஜவின் 9 வருட ஆட்சி என்பதே தேசிய பேரிடர்தான், எனவே மற்றவற்றை தனியாக தேசிய பேரிடராக பார்க்காமல் இருப்பதாக பதிவிட்டிருக்கிறார்.

இந்த விவகாரத்தில் ஒன்றிய குழு அமைக்கப்பட்டு மழைநீரால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அவர்கள் ஆய்வு செய்து, தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு இருப்பதாக பாராட்டு தெரிவித்தனர். அதனை நிர்மலா சீதாராமன் அரசியலாக மாற்ற முயற்சிக்கிறார். நான் யாரையும் மரியாதை குறைவாக பேசவில்லை. நம்முடைய வரியை தான் ஒன்றிய அரசிடம் நிதியாக கேட்கிறோம். மீண்டும் அதனை மரியாதையாக கேட்கிறேன். ‘‘அப்பன்’’ என்று கூறிவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

அப்பன் என்பது கெட்ட வார்த்தையா? தெரியாமல் தான் கேட்கிறேன். மரியாதைக்குரிய ஒன்றிய அமைச்சரின் அப்பா, வணக்கத்திற்குரிய அப்பா, மாண்புமிகு அப்பா என மாற்றிக்கொண்டேன். இவ்வாறு அவர் பேசினார். இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் திவ்யதர்சினி, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

You may also like

Leave a Comment

13 − 5 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi