புதுடெல்லி: மக்களவை தேர்தலில் பாஜ வெற்றி பெற்று மோடி 3வது முறையாக பிரதமர் பதவி ஏற்றுள்ளார். 2024-25 ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை அடுத்த மாதத்தின் பிற்பகுதியில் மக்களவையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். இதையொட்டி பட்ஜெட் தயாரிப்புக்கு முந்தைய ஆலோசனைகளை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடங்க உள்ளார். நாளை வருவாய் துறை செயலாளர் சஞ்சய் மல்கோத்ராவுடன் அவர் ஆலோசனை நடத்துகிறார். அதை தொடர்ந்து 20ம் தேதி தொழில்துறை சார்ந்த அமைப்புகளுடன் அமைச்சர் ஆலோசனை நடத்துவார் என வட்டாரங்கள் தெரிவித்தன.
ஒன்றிய பட்ஜெட்: அமைச்சர் ஆலோசனை
238