கோவை, ஏப். 25: சென்னை – கோவை இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரயில் சேவையை கடந்த 8-ம் தேதி பிரதமர் மோடி துவங்கி வைத்தார். இந்த ரயில் சேவை மற்றும் பயணிகளின் வசதிகள் குறித்து தெரிந்து கொள்ள, ஈரோடு வந்த ஒன்றிய சுற்றுலா மற்றும் கலாசாரத்துறை கிஷன் ரெட்டி, ஈரோடு நாடாளுமன்ற தொகுதி பார்வையாளர் நந்தகுமார், சதீஷ்குமார் ஆகியோருடன், வந்தே பாரத் ரயிலில் ஈரோடு ரயில் நிலையத்தில் இருந்து கோவை ரயில்நிலையம் நேற்று வந்தார். அப்போது, ரயில் பயணிகளிடம் ஒன்றிய அமைச்சர் வந்தே பாரத் ரயில் சேவை மற்றும் வசதிகள் குறித்து கேட்டறிந்தார். அவரிடம் பயணிகள் பலர் ரயில் சேவை சிறப்பாக இருப்பதாக தெரிவித்தனர்.