சென்னை: டாஸ்மாக் ஊழியர்கள் மீது பதியப்பட்ட 47 வழக்குகளில் பெரும்பாலான வழக்குகள், சம்பந்தப்பட்ட ஊழியர்கள் தகுந்த விளக்கத்தை கொடுத்து வழக்குகள் முடித்து வைக்கப்பட்டு விட்டன. சில வழக்குகள் விடுதலையும் ஆகி இருக்கின்றன. இதையெல்லாம் வைத்துக்கொண்டு டாஸ்மாக் நிறுவனத்திற்கு உள்ளேயே சென்று ED சோதனை செய்வது முறையற்றது என திமுக சட்டத்துறை செயலாளர் என்.ஆர்.இளங்கோ எம்.பி. கூறியுள்ளார். ஒன்றிய அரசு விசாரணை அமைப்புகளை தவறாக பயன்படுத்துகிறது என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
ஒன்றிய அரசு விசாரணை அமைப்புகளை தவறாக பயன்படுத்துகிறது: திமுக சட்டத்துறை செயலாளர் பேட்டி
0