சென்னை: ஒன்றிய அரசு கல்வி நிதி ஒதுக்காததால் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பாதிப்பு என அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். பள்ளிக்கல்வித்துறைக்கு கடந்த ஜூன் மாதம் வரவேண்டிய ரூ.573 கோடி நிதியை ஒன்றிய அரசு வழங்கவில்லை. அதுமட்டுமல்ல கடந்த ஆண்டு இறுதித் தவணையாக வரவேண்டிய ரூ.249 கோடியையும் ஒன்றிய அரசு வழங்கவில்லை. புதிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று ஒன்றிய அரசு அழுத்தம் கொடுக்கிறது என அவர் கூறியுள்ளார்.