சென்னை: ஒன்றிய நிதிநிலை அறிக்கையில் தமிழகத்திற்கான திட்டங்களை அறிவிக்காததை கண்டித்து அதிமுக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. அதிமுக அவசர செயற்குழுவில் மொத்தம் 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. செயற்குழுவில் 9 தீர்மானங்கள் மற்றும் 2 சிறப்புத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தமிழ்நாட்டில் மின் கட்டண உயர்வை ரத்து செய்யக் கோரியும், மாதாந்திர மின் கணக்கீட்டு முறையை அமல்படுத்தக் கோரி அதிமுக கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.