மதுரை: தமிழ்நாட்டில் உள்ள கடன் வசூல் தீர்ப்பாயங்களுக்கு ஏன் இந்த நிலைமை? என உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. காலி இடங்களை நிரப்ப எடுத்த நடவடிக்கை குறித்து பதில் மனு தாக்கல் செய்ய ஒன்றிய நிதித்துறை செயலருக்கு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. தென்காசியை சேர்ந்த சேர்மன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். வங்கி கடனை செலுத்தாததால் மனுதாரர் சொத்துகளை ஏலம் விட உள்ளதாக வங்கி நிர்வாகம் மின் ஏல அறிவிப்பு வெளியானதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.