டெல்லி: ஒன்றிய பட்ஜெட்டை கண்டித்து நாடாளுமன்ற இரு அவைகளில் இருந்தும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். ஒன்றிய பட்ஜெட்டில் இந்தியா கூட்டணி கட்சிகள் ஆளும் மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டதை கண்டித்து வெளிநடப்பு செய்தனர். தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கு ஒன்றிய பட்ஜெட்டில் எந்த திட்டமும் அறிவிக்கவில்லை என கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஒன்றிய பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டது குறித்து விவாதிக்கக் கோரி அளித்த நோட்டீஸ் நிராகரிப்பட்டது.