சென்னை: தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரிய தலைவர் நியமனத்தை ரத்து செய்யக்கோரி ஐகோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. சீருடைப் பணியாளர் தேர்வு வாரிய தலைவராக முன்னாள் டிஜிபி சுனில்குமார் நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு எழுந்துள்ளது. சுனில்குமாரை நியமித்தது, பணியில் உள்ள அதிகாரிகளின் உரிமையை பறிக்கும் செயல். பொதுமக்கள் மற்றும் காவல்துறையின் நலனை கருத்தில் கொள்ளாமல் உள்நோக்கத்தோடு நியமனம் செய்யப்பட்டுள்ளது. இடைக்கால நிவாரணமாக சுனில் குமார் செயல்பட தடை விதிக்க வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.