வேதாரண்யம்,ஜூலை 26: வேதாரண்யம் அடுத்த, அண்டர்காடு சுந்தரேச விலாஸ் அரசு உதவி தொடக்கப்பள்ளியில் தேசிய சமையலர் தினம் பள்ளி வளாகத்தில் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு பள்ளி ஆசிரியை வசந்தா தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் பள்ளி செயலாளர் ஆறுமுகம், பொறுப்பு தலைமையாசிரியர் ரவீந்திரன், ஆசிரியர்கள் சந்திரசேகரன், சரண்யா, இலக்கியா, விஜயலக்ஷ்மி, ஆனந்தன் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பள்ளியில் பணிபுரியும் சத்துணவுத்திட்ட சமையலர் சண்முகனந்தனுக்கு பொன்னாடை அணிவிக்கப்பட்டு நினைவுப்பரிசு வழங்கபட்டது.