பல்லாவரம்: பம்மல் அண்ணா நகர், இளங்கோ தெருவில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் நடந்து வருகிறது. நேற்று முன்தினம் 10 அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டி, அதில் குழாய் பதிக்கும் பணியில் சேலத்தை சேர்ந்த ஒப்பந்த ஊழியர் அருள் (45) என்பவர் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக மண் சரிந்து, பள்ளத்தில் விழுந்ததில், அருள் மூச்சுத் திணறி பரிதாபமாக உயிரிழந்தார்.இதனிடையே, முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் எதுவும் செய்யாமல் தொழிலாளர்களை பணியில் ஈடுபடுத்தியதே இந்த விபத்துக்கு காரணம் என்று கூறி, அருளின் மனைவி சாந்தி என்பவர், பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யாமல் பணியில் ஈடுபடுத்தியவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நேற்று பம்மல் சங்கர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.அதன் பேரில் போலீசார் பாதாள சாக்கடை திட்டப் பணிகளை மேற்கொள்ளும் ஒப்பந்த நிறுவனத்தின் பொறுப்பாளர் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாதாள சாக்கடை பணியில் தொழிலாளி பலி 6 பேர் மீது வழக்குப்பதிவு
0