சென்னை: தமிழ்நாட்டில் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு தொடங்கியுள்ளது. மாநில ஒதுக்கீட்டு இடங்களுக்கான மருத்துவக் கலந்தாய்வு இன்று முதல் ஆகஸ்ட் 29 வரை நடைபெறும். சிறப்பு பிரிவினர், 7.5% இட ஒத்துக்கீட்டு மாணவர்களுக்கு நாளை கலந்தாய்வு நடைபெறவுள்ளது. பொதுப்பிரிவில் இடம்பெற்றுள்ள 28,819 மாணவர்கள் tnselection.org மூலம் விண்ணப்பிக்கலாம். இன்று முதல் ஆகஸ்ட் 27 மாலை 5 மணி வரை மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளை தேர்வு செய்யலாம்.