இஸ்லாமாபாத்: ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் தலைமை பதவியை நேற்று முதல் பாகிஸ்தான் ஏற்றுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் பாகிஸ்தான் நிரந்தரமற்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டது. பாகிஸ்தானின் பதவிக்காலம் இரண்டு ஆண்டுகள் ஆகும். ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் தலைமை பதவியானது 15 உறுப்பினர்களிடையே ஒவ்வொரு மாதமும் அகர வரிசைப்படி மாறி வரும்.
இதன்படி ஜூலை மாதம் பாதுகாப்பு கவுன்சிலில் தலைமை பதவி பாகிஸ்தானுக்கு கிடைத்துள்ளது. தலைமை பதவியை பாகிஸ்தான் நேற்று ஏற்றுக்கொண்டது. இது குறித்து பாகிஸ்தான் தூதர் ஆசிம் இப்திகார் அகமது கூறுகையில், ‘‘பாகிஸ்தானின் தலைமைப் பதவியானது வெளிப்படையானதாகவும், அனைவரையும் உள்ளடக்கியதாகவும் இருக்கும்” என்றார்.