புதுடெல்லி: இந்தியாவில் இருந்து அசாம் மாநிலத்தை பிரித்து தனி நாடு உருவாக்க உல்பா தீவிரவாத அமைப்பு போராட்டம் நடத்தி வந்தது. இதையடுத்து கடந்த 1990ம் ஆண்டு இந்த அமைப்பு தடை செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. குறிப்பிட்ட கால இடைவெளியில் இந்த தடையானது அவ்வப்போது நீட்டிக்கப்பட்டு வருகின்றது. இதன் அடிப்படையில் தற்போது உல்பா அமைப்புக்கான தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த அமைப்பின் செயல்பாடுகள் குறித்த ஆவண ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டதை தொடர்ந்து கடந்த 21ம் தேதி கவுகாத்தி உயர்நீதிமன்ற நீதிபதி மைக்கேல் ஜோதன்குமா தலைமையிலான தீர்ப்பாயம் உல்பா மற்றும் அதன் அனைத்து பிரிவுகள் மற்றும் அமைப்புகள் சட்டவிரோதமானவை என்பதை உறுதி செய்வதற்கு போதுமான காரணங்கள் உள்ளதாக தெரிவித்தனர்.