வாஷிங்டன்: ரஷ்யா -உக்ரைன் இடையே போர் நீடித்து வரும் நிலையில், பிரதமர் மோடி கடந்த மாதம் ரஷ்யாவிற்கு சென்று வந்தார். அவரது இந்த பயணம் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டது. இந்நிலையில் பிரதமர் மோடி கடந்த 23ம் தேதி போலந்து மற்றும் உக்ரைன் நாடுகளுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டார். உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்து பிரதமர் மோடி பேசினார். இந்நிலையில் பிரதமர் மோடியின் போலந்து, உக்ரைன் பயணம் தொடர்பாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். இதேபோல் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடனும் பிரதமர் மோடிநேற்று தொலைபேசியில் உரையாடினார். இது குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பதிவில், ‘‘ரஷ்யா-உக்ரைன் மோதல் குறித்த எனது கண்ணோட்டங்கள் மற்றும் சமீபத்திய உக்ரைன் பயணத்தின் புரிதல்கள் குறித்து அதிபர் புதினுடன் பகிர்ந்து கொண்டேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
உக்ரைன் பயணம் குறித்து ரஷ்ய அதிபர் புடினுடன் பிரதமர் மோடி பேச்சு
previous post