போலந்து பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி உக்ரைன் தலைநகர் கீவ் சென்றடைந்தார். போலந்து நாட்டுக்கு 2 நாள் அரசு முறை பயணமாக பிரதமர் மோடி நேற்று முன்தினம் சென்றார். 45 ஆண்டு இடைவெளிக்குப் பிறகுபோலந்து வந்த இந்திய பிரதமருக்கு தலைநகர் வார்சாவில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. போலந்தில் உள்ள இந்திய வம்சாவளியினர் மற்றும் தொழிலதிபர்களை பிரதமர் மோடி நேற்று முன்தினம் சந்தித்தார். போலந்து அதிபர் ஆண்ட்ரெஜ் டூடாவையும் பிரதமர் மோடி நேற்று சந்தித்து பேசினார்.
பிரதமர் மோடியுடன் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரும் போலந்து சென்றார். போலந்து பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி உக்ரைன் புறப்பட்டார். ரயில் மூலமாக உக்ரைனுக்கு சென்ற பிரதமர் மோடி, உக்ரைன் தலைநகர் கீவ் சென்றடைந்தார். உக்ரைன் நாட்டு அதிபர் விளாடிமிர் ஸெலன்ஸ்கியின் அழைப்பை ஏற்று, மோடி அந்நாட்டுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார். உக்ரைன் நாட்டுத் தலைவரை சந்தித்து, நடந்து வரும் போரை அமைதியான முறையில் தீர்க்கும் முன்னெடுப்புகளை பிரதமர் மோடி பகிர்ந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
1991ம் அண்டு உக்ரைன் சுதந்திரம் பெற்ற பிறகு, அந்நாட்டுக்கு பயணம் மேற்கொள்ளும் முதல் இந்திய பிரதமர், மோடி என்பது குறிப்பிடத்தக்கது.