கீவ்: உக்ரைனின் நகரங்களை குறிவைத்து இரண்டாவது நாளாக நேற்றும் ரஷ்யா வான்வழி தாக்குதலை நடத்தியது. இதில் 3 பேர் பலியானார்கள். ரஷ்யா-உக்ரைன் இடையே போர் நிறுத்த முயற்சிகள் தோல்வியில் முடிவடைந்தது. இந்நிலையில் ரஷ்யாவின் விமானப்படை தளத்தின் மீது உக்ரைன் தாக்குதல் நடத்தியது. இது ரஷ்யாவின் தாக்குதலை மேலும் அதிகரிக்கத்தூண்டியதாக கருதப்படுகின்றது. உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா தீவிரப்படுத்தி உள்ளது. ரஷ்யாவின் சரமாரியான தாக்குதலில் இது மிகவும் மோசமான தாக்குதலாகும். நேற்று காலை உக்ரைனின் கிழக்கு நகரமான கார்கிவை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்ட்டது. இந்த தாக்குதலில் 18 அடுக்குமாடி கட்டிடங்கள் மற்றும் 13 தனியார் வீடுகள் சேதமடைந்தன. தாக்குதலில் ரஷ்யாவின் 48 டிரோன்கள், இரண்டு ஏவுகணைகள் மற்றும் 4 வான்வழி குண்டுகள் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகின்றது. இந்த தாக்குதலில் குறைந்தது 3 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 21 பேர் காயமடைந்துள்ளனர்.
உக்ரைன் கார்கிவ் நகர் மீது ரஷ்யா தீவிர தாக்குதல்: 3 பேர் பலி; 21 பேர் காயம்
0