உக்ரைன்: உக்ரைனுக்கு இந்தியா சார்பில் மருத்துவ உதவிகளை பிரதமர் நரேந்திர மோடி வழங்கினார். போரில் காயமடைந்தவர்களுக்கு விரைவாக சிகிச்சை அளிக்க ஏதுவாக நடமாடும் மருத்துவமனைகளை உக்ரைனுக்கு பிரதமர் மோடி அளித்தார். வரலாற்றுச் சிறப்புமிக்க பயணமாக உக்ரைன் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி அந்நாட்டு அதிபர் விலாதிமிர் ஜெலன்ஸ்கியை அவரது மாளிகையில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.