கிவ்: உக்ரைன் ரஷ்யா போர் மூன்றாண்டுகளை கடந்து நீடித்து வரும் நிலையில் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் எடுக்கும் முயற்சியில் பலனேதும் கிட்டவில்லை. இந்நிலையில் கடந்த வௌ்ளி ஞாயிற்றுக்கிழமைக்கிடையே 900 டிரோன்களை ஏவியும், கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று ஒரேஇரவில் உக்ரைனின் பல்வேறு பகுதிகளை குறி வைத்து 355 டிரோன்கள் மூலம் ரஷ்யா தாக்குதல் நடத்தியது.
நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று அதிகாலை வரை 60 டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியது. இதுகுறித்து ரஷ்யா கிரெம்ளின் மாளிகை அதிகாரி ஒருவர் கூறுகையில், “ரஷ்யாவின் ஏழு இடங்களை குறி வைத்து ஒரேஇரவில் உக்ரைன் ஏவிய 99 டிரோன்களை ரஷ்யாவின் வான்படை இடைமறித்து அழித்தது. இதனிடையே, உக்ரைன் ரஷ்யா இடையே உள்ள வடகிழக்கு சுமி பிராந்தியத்தின் நான்கு கிராமங்களை ரஷ்யா கைப்பற்றி உள்ளது” என்றார்.