Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

உக்ரைன் மீது இதுவரை இல்லாத அளவிற்கு, 550 ட்ரோன்கள், 11 ஏவுகணைகள் பயன்படுத்தி ரஷ்ய ராணுவம் தாக்குதல்

கீவ்: உக்ரைன் மீது இதுவரை இல்லாத அளவிற்கு, 550 ட்ரோன்கள், 11 ஏவுகணைகள் பயன்படுத்தி ரஷ்ய ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் ஒருவர் உயிரிழந்த நிலையில், 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

உக்ரைன்-ரஷ்யா இடையே 3 ஆண்டுகளுக்கு மேலாக போர் நடந்து வருகிறது. அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், இந்த போரை நிறுத்துவதற்காக கடும் முயற்சிகள் செய்து வருகிறார். இது தொடர்பாக துருக்கியில் இரு நாட்டு முக்கிய பிரதிநிதிகள் 2 முறை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இருப்பினும் போர் ஏற்ப்படவில்லை, மாறாக போர் தீவிரம் அடைந்துவருகிறது.

இந்த நிலையில் போர் தொடங்கியதில் இருந்து இதுவரை இல்லாத அளவில் ரஷ்யா அதிகப்படியான டிரோன் மற்றும் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி உள்ளதாக உக்ரைன் அறிவித்துள்ளது. உக்ரைனின் முக்கிய நகரங்கள் மீது நீண்ட தூர ஏவுகணை கொண்டு ரஷ்யா தாக்குதல் நடத்தியது. முக்கியமாக கீவ், சுமி, கார்கிவ், நிப்ரோபெட்ரோவ்ஸ்க், செர்னிகிவப் ஆகிய நகரங்களை இலக்காக கொண்டு நேற்று முன்தினம் இரவு முதல் இடைவிடாமல் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. .

இரவு முழுவதும் 550 டிரோன்கள் மற்றும் 11 ஏவுகணைகள் ஏவப்பட்டதாக உக்ரைன் கூறி உள்ளது. இதில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் 23 பேர் காயம் அடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.