சென்னை: மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த 32 தமிழக மீனவர்களை, எல்லை தாண்டியதாகக் கூறி பிரிட்டன் கடற்படையினர் சிறைபிடித்து, இங்கிலாந்து நாட்டுக்குச் சொந்தமான டீகோ கார்சியா தீவுக்குக் கொண்டு சென்று அவர்களை சிறையில் அடைத்துள்ளனர். மீனவர்கள் கைது செய்யப்பட்ட தகவல், அவர்களின் குடும்பத்தினருக்கு தெரிய வந்துள்ளது. கவலை அடைந்த அவர்கள் மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குமரி மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து மனு அளித்துள்ளனர். இது தொடர்பாக ஒன்றிய, மாநில அரசுகளுக்கும் கோரிக்கை விடுத்துள்ளனர். மீனவர்களை மீட்க அரசு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.