டெல்லி: இங்கிலாந்து செல்லும் இந்தியர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று ஒன்றிய அரசு அறிவுரை வழங்கியது. இங்கிலாந்தில் சில இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருவதால் அங்கு செல்வதை தவிர்க்க வேண்டும். லண்டனில் உள்ள இந்திய தூதரகம் இங்கிலாந்தில் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறது. இங்கிலாந்து செல்லும் இந்தியர்கள் அவசர உதவிக்கு 44(0) 2078369147 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். in.london@mea.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தகவல் அனுப்பி உதவி கேட்கலாம் என்றும் தெரிவிக்கபப்ட்டுள்ளது.