லண்டன்: இங்கிலாந்து பிரதமருக்கு சொந்தமான வீட்டில் நேற்று முன்தினம் தீ விபத்து ஏற்பட்டது. இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் அதிகாரப்பூர்வ அரசு இல்லத்தில் வசித்து வருகின்றார். இந்நிலையில் வடக்கு லண்டனின் கேம்டனில் உள்ள கென்டிஸ் டவுனில் உள்ள அவருக்கு சொந்தமான வீட்டில் நேற்று முன்தினம் அதிகாலையில் தீ விபத்து ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த போலீசார் அங்கு விரைந்தனர். மேலும் முன்னதாக கடந்த 8ம் தேதி வாகனத்தில் பற்றி தீ மற்றும் 11ம் தேதி பிரதமருக்கு சொந்தமான மற்றொரு இடத்தின் நுழைவு வாயிலில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த மூன்று சம்பவங்களுக்கும் தொடர்பு உள்ளதாக என்பது குறித்து தீவிரவாத எதிர்ப்பு போலீசார் விசாரணையை நடத்தி வருகின்றனர். இந்த விவகாரத்தில் சந்தேகத்தின் அடிப்படையில் 21 வயது இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இங்கிலாந்து பிரதமர் வீட்டில் தீ: இளைஞர் கைது
0