போபால்: மத்திய பிரதேசத்தின் உஜ்ஜைனில் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற மகாகாளேஸ்வரர் கோயிலில் சுமார் 1,500 பக்தர்கள் ஒரே நேரத்தில் உடுக்கை அடித்து புதிய கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளனர். நாட்டில் உள்ள 12 ஜோதிர்லிங்கங்களில் ஒன்றான மகாகாளேஸ்வரர் கோயில் வளாகத்தில் நடந்த இந்நிகழ்ச்சியில் பக்தர்கள் சிறிய அளவிலான உடுக்கையை ஒரே நேரத்தில் அடித்து உலக சாதனை படைத்தனர். இதற்கு முன், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் கடந்த 2022 ஆகஸ்ட் மாதம் இந்தியாவின் 75வது சுதந்திர தின அமுத பெருவிழாவை ஒட்டி 488 இந்திய வம்சாவளிகள் ஒரே நேரத்தில் உடுக்கை அடித்ததே முந்தைய சாதனையாக இருந்தது.