ஒன்றிய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறையின் கீழ் செயல்படும் தேசிய தேர்வாணையத்தால் நடத்தப்படும் யுஜிசி – நெட் தேர்வுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் பல்கலைக்கழகங்களில் உதவிப் பேராசிரியர்/ ஜூனியர் ரிசர்ச் பெல்லோஷிப்பாக சேரலாம்.
தேர்வு: UGC- NET EXAM
(December- 2023).
தகுதி: கலை/அறிவியல்/ மேலாண்மையியல்/ பொருளாதாரம்/ மானுடவியல் ஆகிய துறையைச் சேர்ந்த ஏதாவதொரு பாடத்தில் குறைந்தது 55% மதிப்பெண்களுடன் முதுநிலைப் பட்டம். முதுநிலை பட்டப்படிப்பு இறுதியாண்டு மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். அவர்கள் நெட் தேர்வு நடந்த தேதியிலிருந்து 2 ஆண்டுகளுக்குள் முதுநிலை பட்டப்படிப்பை முடித்து தேர்ச்சி பெற வேண்டும். நெட் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டுள்ள பாடப்பிரிவுகள் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.
எஸ்சி/எஸ்டி/ ஒபிசி நான் கிரிமீலேயர் பிரவைச் சேர்ந்த மாணவர்கள் முதுநிலை பட்டப்படிப்பில் குறைந்தது 50% மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும் நெட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.
வயது: நெட் தேர்வு எழுதி கல்லூரிகளில் உதவி பேராசிரியராக பணி புரிய விரும்புபவர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு கிடையாது. ஜூனியர் ரிசர்ச் பெல்லோஷிப் எனப்படும் இளநிலை ஆராய்ச்சியாளராக விரும்புபவர்கள் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். எஸ்சி/எஸ்டி/ஒபிசி/ மாற்றுத் திறனாளிகள்/ திருநங்கைகள் ஆகியோருக்கு 5 வருட தளர்வு அளிக்கப்படும். வயது வரம்பானது 1.12.2023 தேதியின்படி நிர்ணயிக்கப்படும். நெட் தேர்வு 2 தாள்களை கொண்டது. தாள்-1ல் விண்ணப்பதாரர் கற்பிக்கும் திறனை பரிசோதிக்கும் வகையில் 50 கேள்விகள் கேட்கப்படும். 100 மதிப்பெண் வழங்கப்படும். தேர்வு 1 மணி நேரம் நடைபெறும். தாள்-2ல் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கும் முக்கிய பாடங்களிலிருந்து 100 கேள்விகள் கேட்கப்படும். 200 மதிப்பெண்கள் வழங்கப்படும். ஆன்லைனில் தேர்வுகள் நடத்தப்படும். எழுத்துத் தேர்வுக்கான பாடத்திட்டம், முந்தைய ஆண்டில் நடந்த தேர்வுகளின் மாதிரி வினாத்தாள் ஆகியவை யுஜிசி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
கட்டணம்: பொது பிரிவினருக்கு ₹1,150, ஒபிசி/ பொருளாதார பிற்பட்டோருக்கு ₹600/-, எஸ்சி/எஸ்டி/ மாற்றுத் திறனாளிகளுக்கு ₹325/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
தமிழ்நாட்டில் அரியலூர், செங்கல்பட்டு, சென்னை, கோவை, கடலூர், தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, கரூர், மதுரை, நாமக்கல், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, திருப்பூர், திருவண்ணாமலை, நீலகிரி, வேலூர், விழுப்புரம், கிருஷ்ணகிரி, சேலம், சிவகங்கை, திருவள்ளூர், நெல்லை, தஞ்சை ஆகிய மையங்களில் நடைபெறும். www.ugcnet.nta என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 28.10.2023.