யவத்மால்: மகாராஷ்ரா சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே வானி பகுதிக்கு ஹெலிகாப்டரில் வந்திறங்கியதும், அவரது கைப்பையை தேர்தல் ஆணைய அதிகாரிகள் சோதனை செய்தனர்.
இதுபற்றி உத்தவ் தாக்கரே தேர்தல் பிரசாரத்தில் கூறுகையில், ‘‘ அதிகாரிகள் என்னிடம் சோதனை நடத்திய விதத்திலேயே, மோடியிடமோ அல்லது அமித்ஷாவிடமோ சோதனை நடத்துவார்களா? என்று கேள்வி எழுப்பினார்.