சென்னை: திமுக விளையாட்டு மேம்பாட்டு அணியின் செயலாளர் தயாநிதி மாறன் எம்பி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: திமுக இளைஞர் அணிச் செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் 46வது பிறந்தநாளையொட்டி தமிழ்நாடு முழுவதும் கடந்த 20ம் தேதி முதல் 46 மாவட்டங்களில் விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுகிறது.
அதன்படி வரும் 27ம் தேதி திருவள்ளூர் மத்திய மாவட்டத்தில் கால்பந்து போட்டியும், காஞ்சிபுரம் தெற்கு மாவட்டத்தில் கபடி போட்டியும், டிசம்பர் 2ம் தேதி சென்னை தெற்கு மாவட்டத்தில் இறகுப்பந்து போட்டியும், திருவள்ளூர் கிழக்கு மாவட்டத்தில் கபடி போட்டியும், நடக்கிறது. 3ம் தேதி சென்னை கிழக்கு மாவட்டத்தில் கால்பந்து போட்டி, காஞ்சிபுரம் வடக்கு மாவட்டத்தில் சிலம்பம் போட்டி, திருவள்ளூர் மேற்கு மாவட்டத்தில் கைப்பந்து போட்டி நடக்கிறது. டிசம்பர் 23ம் தேதி சென்னை வடகிழக்கு மாவட்டத்தில் மகளிர் கால்பந்து போட்டி நடக்கிறது.
இதேபோல் அனைத்து மாவட்டங்களிலும் போட்டிகள் நடத்தப்பட்டு 46வது மாவட்டமாக 2024 ஜனவரி 20ம் தேதி தஞ்சை வடக்கு மாவட்டத்தில் கபடி, கூடைப்பந்து போட்டி நடக்கிறது.