நன்றி குங்குமம் டாக்டர்
நவீன உணவுமுறை பழக்கவழக்கங்களும், நொறுக்குத்தீனி கொறித்துக் கொண்டே இருப்பதும் தான் பெரும்பாலானவர்களுக்கு உடல் எடை அதிகரிக்க முக்கியக் காரணமாக இருக்கிறது. இதனால், உணவுமுறைகளில் மாற்றம் செய்தாலே நிச்சயம் உடல் எடையைக் குறைத்துவிடலாம். அந்த வகையில் கார்போஹைட்ரேட் மற்றும் டிரான்ஸ் ஃபேட் உணவுகளைத் தவிர்த்துவிட்டு அதிக புரதங்கள், நார்ச்சத்துக்கள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்பு உணவுகளை அதிகமாகச் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதோடு நிறைய வைட்டமின்களும் மினரல்களும் இருக்க வேண்டும். இவையெல்லாமே நிறைந்திருக்கிற உணவு என்றால் நட்ஸ் மற்றும் உலர் பழங்கள்தான். அவற்றில் சிலவற்றைப் பார்ப்போம்.
பாதாம்
பாதாமில் பருப்பில் நிறைய புரதங்களும் நார்ச்சத்துக்களும் இருக்கின்றன. அதேபோல ஆரோக்கியமான கொழுப்பு அமிலங்களும் உள்ளன. எனவே, தினமும் ஒரு கைப்பிடியளவு பாதாம் பருப்புகளை எடுத்துக் கொள்ளும்போது நீண்ட நேரம் வயிறு நிரம்பிய உணர்வோடு இருக்கும். பசியைக் கட்டுப்படுத்தும். இதனால் அதிக கலோரிகள் எடுப்பதும் குறையும். உடலில் தேங்கும் தேவையில்லாத கெட்ட கொழுப்பைக் கரைத்து உடல் எடையைக் குறைக்கச் செய்யும்.
வால்நட்
எடையைக் குறைப்பதில் வால்நட்டுக்கு பெரும்பங்கு உண்டு. வால்நட் நார்ச்சத்துக்களும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்களும் நிறைந்தது. ஒமேகா 3 கொழுப்பு அமிலம் மெட்டபாலிசத்தை அதிகரிக்கச் செய்வதோடு மட்டுமின்றி பசியைக் கட்டுப்படுத்தி அதிக கலோரி உலர் திராட்சை. தேவையற்ற கொழுப்பைக் கரைத்து உடல் எடையைக் குறைக்க உதவுவதில் உலர் திராட்சைக்கு மிக முக்கியப் பங்குண்டு.
பிஸ்தா
டயட்டில் இருப்பவர்கள் எடுத்துக் கொள்ள வேண்டிய முக்கியமான மற்றொரு நட் வகைதான் இந்த பிஸ்தா. பிஸ்தாவில் நிறைய புரதங்களும் அதிகப்படியான நார்ச்சத்துக்களும் இருக்கின்றன. இதை காலை நேரத்திலோ அல்லது மதிய ஸ்நாக்ஸ் நேரத்திலோ எடுத்துக்கொள்ளும் போது நீண்ட நேரத்தில் பசியைக் கட்டுப்படுத்தி சாப்பிட்ட நிறைவைத் தரும். இது எடை குறைப்புக்கு உதவி செய்யும் நொறுக்குத் தீனி கொறித்துக் கொண்டே இருப்பது தான் எடை அதிகரிக்க முக்கியக் காரணமாக இருக்கிறது. அதைக் கட்டுப்படுத்தி எடை குறைக்க உதவுகிறது.
பேரீச்சை
பேரீச்சையில், இயற்கையான சர்க்கரை அதிகமாக இருக்கிறது. அதேபோல பேரீச்சைப் பழத்தில் அதிக நார்ச்சத்துக்களும் இரும்புச்சத்தும் இருக்கிறது. இதை தினமும் சிறிதளவு எடுத்துக் கொள்ளும்போது நீண்ட நேரத்திற்கு வயிறு நிரம்பிய உணர்வோடு வைத்திருக்கும்.
தொகுப்பு: தவநிதி