நிலக்கோட்டை: திண்டுக்கல், பேகம்பூரை சேர்ந்தவர் காதர் அலி (38). தனியார் நிதி நிறுவன மேலாளர். இவர் உடன் பணியாற்றும் நாகராஜுடன் (28) நேற்று வத்தலக்குண்டுவிற்கு டூவீலரில் சென்றார். இவர்களுக்கு பின்னால் செம்பட்டி, வீரசிக்கம்பட்டியைச் சேர்ந்த விவசாயி சடமாயன் (50), மனைவி ரதி (48)யுடன் டூவீலரில் வந்துள்ளார்.
செம்பட்டி அருகே வந்தபோது வத்தலக்குண்டுவில் இருந்து காய்கறிகளுடன் திண்டுக்கல் சென்ற லாரி, இரு டூவீலர்கள் மீதும் அடுத்தடுத்து மோதியது. இதில் காதர் அலி, நாகராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். திண்டுக்கல் ஜிஹெச்சில் சடமாயன் உயிழந்தார். ரதிக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்து செம்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து லாரி டிரைவர் நாகராஜிடம் விசாரிக்கின்றனர். கடந்த வாரம் இங்கு பாலிடெக்னிக் மாணவர்கள், வனக்காப்பாளர் என 3 பேர் லாரி மோதி பலியானது குறிப்பிடத்தக்கது.