டெல்லி: தேசிய நெடுஞ்சாலைகளில் இருசக்கர வாகனங்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கும்
திட்டம் எதுவும் இல்லை என தேசிய நெடுஞ்சாலை ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. சுங்கக் கட்டணம் வசூலிக்க ஒன்றிய அரசு பரீசிலித்துவருவதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவிய நிலையில் மறுப்பு தெரிவித்துள்ளது. நான்கு சக்கர வாகனங்களுக்கு ஏற்கனவே சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால் இரு சக்கர வாகனங்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிப்பது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இரு சக்கர வாகனங்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலித்தால், போக்குவரத்து நெரிசல் குறையும் என்றும், பராமரிப்பு செலவுகள் அதிகரிக்கும் என்றும் கருத்துக்கள் நிலவுகின்றன.
இதைத்தொடர்ந்து, தினசரி நெடுஞ்சாலைகளில் பயணிப்பவர்களுக்கான வருடாந்திர ஃபாஸ்டேக் பாஸ் திட்டத்தை அரசாங்கம் சமீபத்தில் அறிவித்துள்ளது. இதன் மூலம் சுங்கச்சாவடிகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வருடாந்திர பாஸின் விலை ரூ.3,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த தொகையில், பயனர்கள் 200 முறை சுங்கச்சாவடியை கடக்கலாம் அல்லது ஒரு வருடம் வரை பாஸை பயன்படுத்தலாம். இதில் எது முதலில் வருகிறதோ, அதுவரை இந்த பாஸ் செல்லுபடியாகும்.
சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் கூற்றுப்படி, இந்த திட்டம் வழக்கமாக நெடுஞ்சாலைகளில் பயணம் செய்பவர்களின் ஆண்டு சுங்க கட்டணச் செலவை 70% வரை குறைக்கும். இதன் மூலம் ஆண்டுக்கு சுமார் ரூ.7,000 வரை சேமிக்க முடியும். இதனால் சுங்க சாவடிகளுக்கு பெரிய அளவில் இழப்பு ஏற்படும் நிலையம் உள்ளது. இந்த நிலையில், இருசக்கர வாகனங்களுக்கு சுங்கக்கட்டணம் வசூலிப்பதற்கு தேவையான கருவிகளை உருவாக்கப்பட உள்ளது. சுங்கக்கட்டணம் அமலுக்கு வந்தால் இருசக்கர வாகனம் வைத்துள்ளவர்கள் ஃபாஸ்டேக் வாங்குவது கட்டாயமாக்கப்படும் . ஜூலை 15 முதல் திட்டத்தை ஒன்றிய அரசு அமல்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகிய நிலையில் அதற்கு மறுப்பு தெரிவித்து தேசிய நெடுஞ்சாலை ஆணையம் விளக்கம் தெரிவித்தது.