மதுரை: மதுரை, கோ.புதூர் பஸ் ஸ்டாப் அருகே சந்தேகப்படும்படி பைக்கை ஓட்டி வந்த நபர்களை போலீசார் சுற்றிவளைத்து பிடித்து விசாரித்தனர். விசாரணையில், பைக்கை ஓட்டி வந்த நபர், நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தை சேர்ந்த தினேஷ்வரன் (33) என்பதும், அப்பகுதியில் 10க்கும் மேற்பட்ட டூவீலர்களை திருடியதும் தெரியவந்தது. அவற்றை நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் இந்து முன்னணி நகர தலைவர் முருகனின் மகன் பாலாஜி (32), நாமக்கல் குமாரபாளையம் நகர பாஜ தரவு மேலாண்மை மாவட்ட துணைத்தலைவர் சண்முகம் மகன் விவேக் பாலாஜி (40), குமாரபாளையம் வட்டமலை பகுதியைச் சேர்ந்த இந்து முன்னணி இளைஞரணி பொறுப்பாளர் முருகன் மகன் கவுதம் (23) ஆகியோரிடம் குறைந்த விலைக்கு விற்றதும் தெரியவந்தது. இதையடுத்து தினேஷ்வரன், பாலாஜி, விவேக் பாலாஜி, கவுதம் ஆகியோரை கைது செய்து 13 வாகனங்களை கைப்பற்றினர்.
டூவீலர்கள் திருடிய பாஜ நிர்வாகிகளின் மகன்கள் கைது
0