புதுடெல்லி: அதிமுக உட்கட்சி விவகாரத்தில் வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் கூடுதல் மனு ஒன்றை நேற்று தலைமை தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்துள்ளார்.
அதில், ‘‘அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்வு செய்தது மற்றும் இரட்டை இலை சின்னம் வழங்கியது ஆகியவை தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் இருக்கும் வழக்கில் இறுதி உத்தரவு பிறப்பிக்கப்படும் வரையில் தேர்தல் ஆணையம் இந்த விவகாரத்தில் முன்னதாக வழங்கிய உத்தரவை உடனடியாக நிறுத்தி வைக்க வேண்டும். அதேப்போன்று எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் படிவங்களான ஏ மற்றும் படிவம் பி ஆகியவற்றில் பொதுச்செயலாளர் என்ற முறையில் அல்லது வேறு பொறுப்பில் கையொப்பம் போடுவதற்கு தடை விதிக்க வேண்டும். அதேப்போன்று அதிமுக கட்சியை திருத்தப்படாத கட்சி விதிகளான 20(2), 30(3), 30(4) மற்றும் 43ன் படி புதிய பொதுச்செயலாளரை தேர்வு செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட வேண்டும் என்று
தெரிவித்துள்ளார்.
இரட்டை இலை சின்னம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை தேர்தல் ஆணையம் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பில் மனு ஒன்று தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


