புதுடெல்லி: சமூக ஊடகங்களில் அதிக ஆக்டிவ்வாக இருக்கும் பிரதமர் மோடி எக்ஸ் தளத்தை அதிகம் பயன்படுத்தி வருகிறார். இந்நிலையில், எக்ஸ் தளத்தில் அவர் 10 கோடி பாலோயர்கள் இலக்கை எட்டி சாதனை படைத்துள்ளார். ஏற்கனவே உலக அளவில் அரசின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களில் அதிக பாலோயர்களை கொண்ட தலைவராக மோடி இருந்து வருகிறார். இந்தியாவில் மோடியை தொடர்ந்து ஆம் ஆத்மி தலைவரும் டெல்லி முதல்வருமான கெஜ்ரிவால் 2.75 கோடி பாலோயர்களுடனும், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி 2.64 கோடி பாலோயர்களுடனும் உள்ளனர்.
உலக தலைவர்களில் அதிகபட்சமாக அமெரிக்க அதிபர் பைடன் 3.81 கோடி பாலோயர்களுடனும், துருக்கி அதிபர் எடோகன் 2.15 கோடி பாலோயர்களுடனும் உள்ளனர். உலக அளவில் எக்ஸ் தளத்தில் அதிக பாலோயர்கள் கொண்ட பிரபலங்கள் வரிசையில் மோடி 7வது இடத்தில் உள்ளது. எக்ஸ் தளத்தில் கடந்த 3 ஆண்டில் மட்டும் 3 கோடி பாலோயர்களை மோடி பெற்றுள்ளார்.