டிவிஎஸ் நிறுவனம் புதிய மேம்படுத்தப்பட்ட ஜூபிடர் டிடி எஸ்எக்ஸ்சி கூட்டரை அறிமுகம் செய்துள்ளது. இதில் 124 சிசி இன்ஜின் இடம் பெற்றுள்ளது. இது அதிகபட்சமாக 6,500 ஆர்பிஎம்-ல் 8.5 எச்பி பவரையும், 4,500 ஆர்பிஎம்-ல் 11.1 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். மேம்படுத்தப்பட்ட அம்சமாக இதில் புதிய வண்ண எல்சிடி டிஸ்பிளே இடம் பெற்றுள்ளது.
ஐவரி கிரே மற்றும் ஐவரி பிரவுன் ஆகிய டூயல் டோன் வண்ணம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. டூயல் டோன் வண்ணங்கள்தான் இந்த ஸ்கூட்டரில் மேற்கொள்ளப்பட்டுள்ள முக்கிய மாற்றமாகும். ஷோரூம் விலை சுமார் ரூ.88,492 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.