Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

தவெகவினர் எம்எல்ஏ திருடர்கள்; தமிழ்நாட்டை அழிக்க வந்த நாசகார சக்திதான் தவெக: டிடிவி தினகரன் கடும் தாக்கு

மதுரை: மதுரையில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது; முதலமைச்சர் விஜய் இன்னும் சினிமா நடிகராகவே இருக்கிறார். சினிமா கிளைமாக்ஸில் பேசுவது போல விஜய் பேசுகிறார். பேசினால் கத்திப்பேசுகிறார், இல்லையென்றால் பேசாமலேயே இருக்கிறார் விஜய். காவல்துறை தனது கட்டுப்பாட்டில் உள்ளதை மறந்து விஜய் பேசி வருகிறார். கரூர் நெரிசல் விவகாரத்தில் போலீஸ் தவறு செய்ததாக கூறும் விஜய், போலீஸ் மீது எடுத்த நடவடிக்கை என்ன?

கடை தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைத்தது போல அரசுப் பணி வழங்கியுள்ளார் விஜய். கட்சி நிகழ்ச்சியில் இறந்தவர்களுக்கு அரசு பணி வழங்குவது தவறான முன்னுதாரணம் ஆகும். துக்கத்துக்கு வருவது போல கருப்பு சட்டை மட்டுமே அணிந்திருந்தார்; ஆனால் விஜய் பேச்சில் துக்கம் இல்லை. முதலமைச்சர் விஜய்யின் கரூர் பேச்சு மற்றும் உடல்மொழியில் துக்கம் வெளிப்படவில்லை. வாழ்வு வந்துவிட்டது என்பதற்காக விஜய் அர்த்த ராத்திரியில் குடை பிடிக்க வேண்டாம்

முதலமைச்சர் விஜய் பேச்சில் ஆணவம், அகங்காரம்தான் தெரிகிறது. விஜய்க்கு ஆதரவு கொடுத்த எம்எல்ஏக்கள் அனைவரும் தவெகவை எதிர்த்து வெற்றி பெற்றவர்கள்தான். அதிமுக உறுப்பினர்கள் தானாக பதவி விலகினார்கள் என்பதை குழந்தை கூட நம்பாது. அதிமுக உறுப்பினர்கள் ராஜினாமா செய்தது குதிரை பேரம்தான். தமிழ்நாட்டை அழிக்க வந்த நாசகார சக்திதான் தவெக. தேர்தல் வாக்குறுதிகளை 5 ஆண்டு ஆனாலும் தவெக அரசு நிறைவேற்றாது. அதிமுக எம்எல்ஏக்களை ராஜினாமா செய்ய வைத்தது ஊழல்தான். மக்களை தவெக அரசு ஏமாற்ற வேண்டாம்

பிள்ளை பிடிப்பது போல எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்களை பிடித்து ஆட்சி நடத்துவதை தவிர்க்க வேண்டும். தவெகவினர் எம்எல்ஏ திருடர்கள். 6 அதிமுக எம்.எல்.ஏ.க்களை ராஜினாமா செய்ய வைத்ததே களவாணித்தனம்தான். 'Reel Less Work More' என முதல்வர் விஜய் மாற வேண்டும். ரீல் விடுவதை குறைத்துவிட்டு விஜய் ஆட்சி நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும். ஷூட்டிங் மனநிலையில் இருந்து மாறி விஜய் முதலமைச்சராக வெளியே வர வேண்டும் என்று கூறினார்.